ஏ.ஆர்.ரஹ்மானால் கடுப்பான வட இந்தியர்கள்: லண்டனில் பரபரப்பு


sivalingam| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (05:01 IST)
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க அவர் தமிழ் பாடல்களை மட்டுமே பாடியதால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஹிந்தி பேசும் வட இந்தியர்கள் கடுப்பாகி நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
இந்த நிகழ்ச்சி தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ்ப்பாடல்கள் மட்டுமே பாடப்படும் என்று ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தி பாடல்களை எதிர்பார்த்து வந்த வட இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
 
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் வழக்கம்போல் டுவிட்டரில் வட இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சொற்போர் பலமணி நேரம் நீண்டது. ஒரு தமிழன், தமிழில்தான் பாடுவார் என்று கோஷமே டுவிட்டரில் ஓங்கியிருந்தது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :