திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (23:37 IST)

விஜய் பட நடிகையின் புதிய அவதாரம் ...ரசிகர்கள் பாராட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


விஜய்யின் 65 வது படமான இதில் ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில்,தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே  அறகட்டளை ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: மக்கள் எனக்கு அளிக்கும் பணத்தில் இருந்து அவர்களுக்குத் திருப்பித் தர நினைத்தேன். அதனால், ஆல் எபவுட் லட்( all about love) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவரது செயலுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் பூஜா ஹெக்டே, பிரபாஸுண்ட ராதே ஷ்யாம், சல்மான் கானுடன் ஒரு படம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.