1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (15:33 IST)

மீண்டும் நேசமணி: விக்ரம் ஃபர்ஸ்ட்லுக்கை ஓட்டும் நெட்டிசன்கள்!

மீண்டும் நேசமணி: விக்ரம் ஃபர்ஸ்ட்லுக்கை ஓட்டும் நெட்டிசன்கள்!
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கயிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டரை வைத்து மீண்டும் நேசமணி என நெட்டிசன்கள் கேலி செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நேசமணி என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே. வடிவேலு நடித்த நேசமணி என்ற கேரக்டர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் வரும் நிலையில் அந்த கேரக்டரை மையமாக வைத்து உலக அளவில் நேசமணி ஹேஷ்டேக் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தின் போஸ்டரை கேலியும் கிண்டலும் செய்து மீண்டும் நேசமணி என்ற ஹேஷ்டேக் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
விக்ரம் படத்தின் பாணியிலேயே 3 வடிவேலு, ரமேஷ் கண்ணா மற்றும் சார்லி ஆகிய பிரண்ட்ஸ் படத்தில் நடித்த மூன்று பேர்களின் புகைப்படங்களை வைத்து மீண்டும் நேசமணி படம் என குறிப்பிட்டுள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது