ஜூனியர் என் டி ஆரை இயக்கும் நெல்சன்… நண்பனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்த அனிருத்!
சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தைத் தொடங்கிய நெல்சன் அந்த படம் கிடப்பில் போடப்பட்டதும், நன்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தன்னுடைய வருகையைப் பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்கள் அவரை முன்னணி இயக்குனராக்கினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின. அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் நெல்சன் ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்துக்கு பிறகு நெல்சன், ஜூனியர் என் டி ஆரை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த வாய்ப்பை நெல்சனின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் அனிருத் வாங்கித் தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.