புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (14:12 IST)

400 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ஜூனியர் என் டி ஆரின் தேவரா…!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமாக உருவாகியுள்ளது ‘தேவரா’. இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேவரா படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் வசூலில் பட்டையக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 172 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படம் பெரியளவில் வீழ்ச்சியை சந்தித்தது. அடுத்த இரண்டு நாட்களின் மொத்த வசூல் முதல் நாள் வசூலைத் தொடவில்லை. மூன்று நாட்களில் 304 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று ஆறாவது நாளில் படம் 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.