வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (10:18 IST)

'ஜெயிலர்’ படம் பார்க்கும் முன் ‘கோலமாவு கோகிலா’ ‘டாக்டர்’ பாருங்கள்: நெல்சன் வேண்டுகோள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிவிப்பில் இந்த படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்த கலாநிதி மாறன் மற்றும் இந்த படத்திற்கு சிறப்பாக இசையமைத்த அனிருத் ஆகியோர்களுக்கு நன்றியை. 
 
18 மாதங்கள் கடினமாக உழைத்து 'ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி. குறிப்பாக ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். அவருடைய படத்தை இயக்குவதற்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. 
 
மேலும் 'ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியாக இருப்பதை அடுத்து அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் 'ஜெயிலர்’ படத்தை பார்ப்பதற்கு முன்பு கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று நெல்சன் குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. ஆனால் நெல்சனின் ட்விட்டர் பக்கத்தில் அவ்வாறான பதிவுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அறிக்கை நெல்சன் பெயரால் வெளியான போலி அறிக்கை என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva