பிக்பாஸ் போட்டியாளராக கோட் சூட் கோபிநாத்? பரபரப்பைக் கிளப்பிய தகவல்!
விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 ல் நீயா நானா புகழ் கோபிநாத்தை போட்டியாளராக களமிறக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் கமலஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டியாளர்களின் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது . இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என ஏற்கனவே ஒரு பட்டியல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் நீயா நானா புகழ் கோபிநாத்தும் இதில் ஒரு போட்டியாளராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்காக அவரை எப்படியும் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.