செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (08:08 IST)

பிக்பாஸ் போட்டியாளர்கள் வேண்டுமென்றே பிரபலமாக்கப்பட்டார்களா? பரபரப்பு தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் கமலஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டியாளர்களின் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஏற்கனவே வேண்டும் என்றே பிரபலமாக்கப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சூர்யா தேவி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி,  ஜோ மைக்கேல் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் அனைவருமே சர்ச்சையில் சிக்கியவர் என்பதும் தெரிய வந்துள்ளதால் இவர்கள் வேண்டுமென்றே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சர்ச்சையில் சிக்கபட்டதாகவும் கூறப்படுகிறது 
 
குறிப்பாக வனிதா விவகாரத்தில் வேண்டுமென்றே நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய சூர்யா தேவி, மீரா மிதுன் விவகாரத்தில் வேண்டுமென்றே தலையீட்ட சனம்ஷெட்டி, தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான போஸ்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன், விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே திணிக்கப்படும் ரம்யா பாண்டியன் ஆகியோர் கடந்த சில மாதங்களாகவே பிரபலமாவதற்காக சில சர்ச்சைகளில் வேண்டுமென்றே சிக்கியதாகவும், இதற்கு காரணம் பிக்பாஸ் குழுவினர் என்றும் கூறப்படுகிறது
 
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் சமீபத்தில் ஒரு சில நடிகர் நடிகைகள் வேண்டுமென்றே சர்ச்சையில் சிக்குவதால் இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது