வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (19:56 IST)

நயன்தாராவின் 'ஐரா' படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டின் ஆரம்பமே 'விஸ்வாசம்' என்ற வெற்றி கிடைத்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படமான 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்று 'ஐரா' படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிந்துவிட்டதால் புரமோஷனை அடுத்த வாரம் முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
முதல்முறையாக இரட்டை வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில்  கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படத்தை இயக்கியவர் என்பதும் 'லட்சுமி', 'மா' ஆகிய குறும்படங்கள் மூலம் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.