1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (21:59 IST)

சூப்பர் ஸ்டார் மேனேஜரின் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மேனேஜராக பல வருடங்கள் இருந்த குமார் என்பவர் தயாரிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது
 
இந்த படத்தை அண்டாவ காணோம்' படத்தை இயக்கிய வேல்மதி என்பவர் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் 'கோலமாவு கோகிலா' பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு க்ரைம் கதை என்றும், இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
நடிகை நயன்தாரா ஏற்கனவே 'தளபதி 63', 'கொலையுதிர்க்காலம், 'சயிர நரசிம்மரெட்டி, லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், அவர் நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதியும், சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதியும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது