செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:38 IST)

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மோகன் லால்?

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் லால், ‘பிக் பாஸ்’ மாதிரியான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.


 


 
வெளிநாடுகளிலும், பாலிவுட்டிலும் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, தற்போது தென்னிந்தியாவையும் மையம் கொண்டுள்ளது. தமிழில் 50 நாட்களைக் கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி, தெலுங்கிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல் ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களைப் போல மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் லாலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ‘லால் சலாம்’ என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் போல இருக்குமா என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மலையாள ரசிகர்கள். இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது.