1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (13:01 IST)

மோகன்லாலின் மகன் பிரணவ்க்கு படப்பிடிப்பில் விபத்து

ஜீத்து ஜோசப் இயக்கும் ஆதி என்ற மலையாளப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொச்சியில் நடந்து வருகிறது. அப்போது பிரணவ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

 
இதுபற்றி ஜீத்து ஜோசப் கூறுகையில், ஆக்‌ஷன் காட்சியை படமாக்கியபோது கை விரலில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வந்ததை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று, காயம் பட்ட இடத்தில் தையல் போடப்பட்டுள்ளது. இப்போது நலமாக உள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்க சொன்னதாகவும், இதனை ரசிகர்கள் பெரிதுபடுத்திவிட்டனர் என்றும்  கூறியுள்ளார்.