தீபாவளிக்கு 'மெர்சல்' உறுதி: தேனாண்டாள் முரளி நம்பிக்கை


sivalingam| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (06:31 IST)
விஜய் படம் ஒன்று பிரச்சனை இல்லாமல் வெளியானதாக சரித்திரமே இல்லை. விஜய் படத்திற்கு கடைசி நேரத்தில் யாராவது கேஸ் போடுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த நிலையில் விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் 'மெர்சல்' படத்துக்கும் சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தடைகளை தாண்டி 'மெர்சல்' தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 
 
'மெர்சல்' தலைப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவரவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு விலங்குகள் நல வாரியம் சான்றிதழ் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற போராட்டம் தீபாவளி வரை தொடர்ந்தால்...ஆகிய பிரச்சனைகள் இப்போதைக்கு மெர்சலுக்கு இருக்கின்றது.
 
இந்த நிலையில் இன்றைய நாளில் வெளிவரும் தீர்ப்பு நிச்சயம் தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறிய முரளி, விலங்குகள் நல வாரியம் சான்றிதழ் ஏற்கனவே கிடைத்துவிட்டதாகவும் இதுகுறித்து வெளிவரும் செய்திகள் வெறும் வதந்தியே என்றும் கூறினார். கேளிக்கை வரி மீதான பிரச்சனையில் அரசு தலையிட்டு இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்பதால் தீபாவளி தினத்தில் 'மெர்சல்' வெளியாவது உறுதி என்றும், விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :