'விவேகம்' நடிகருக்கு அழைப்பு விடுத்த 'மெர்சல்' படக்குழு


sivalingam| Last Modified வியாழன், 5 அக்டோபர் 2017 (22:43 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வருமாறு 'விவேகம்' படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு 'மெர்சல்' படக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அவர் யார் தெரியுமா? 'விவேகம்' படத்தில் மைக் என்ற கேரக்டரில் நடித்த செர்ஜ் குரோசன் என்பவர்தான்


 
 
'மெர்சல்' திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் சினிமாஸ் என்ற பிரமாண்டமான திரையரங்கில் வரும் 18ஆம் தேதி திரையிடப்படுகிறது என்பது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', மற்றும் பிரபாஸின் 'பாகுபலி 2' படங்களுக்கு பின்னர் இந்த திரையரங்கில் திரையிடப்படும் 3வது தமிழ்ப்படம் 'மெர்சல்' தான்
 
இந்த திரையரங்கின் டிக்கெட்டோடு அழைப்பிதழும் செர்ஜ் குரோசனுக்கு 'மெர்சல்' படத்தின் பிரான்ஸ் விநியோகிஸ்தர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த தகவலை செர்ஜ் தனது டுவிட்டரில் உறுதி செய்து நன்றியும் தெரிவித்துள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :