ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்து பதிவிட்ட காஜல் பசுபதி
காஜல் பசுபதி மானாட மயிலாட மூலம் திரையுலகில் பிரபலமானவர். கோ, சிங்கம், மற்றும் டிஷ்யூம் படங்களில் நடித்துள்ளார். சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து பின், திரையுலகில் நடிகையாக மாறியவர்.
தற்போது, விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் ஆன இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரபல திரையரங்கத்தின் ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்துள்ளார். நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.