1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (13:32 IST)

ரஜினி ஷூட்டிங்கில் இருந்து துபாய்க்குப் பறக்கும் நடிகை

ரஜினியின் ‘காலா’ படத்தில் நடித்துவரும் ஹுமா குரேஷி, சென்னையில் இருந்து துபாய் புறப்படுகிறார்.
 


 

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார். தற்போது அவருக்கு சென்னையில் ஷூட் இருக்கிறது. ஆனால், பாலிவுட் நடிகரான சோனு சூத், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்பவர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை துபாயில் நடத்துகிறார். எனவே, அதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து 20ஆம் தேதி துபாய் புறப்பட்டுச் செல்கிறார் ஹுமா குரேஷி. நிகழ்ச்சி முடிந்த பின்னர் மறுபடியும் ஷூட்டிங்கில் இணைந்து கொள்வார்.