வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (20:57 IST)

ஆண்கள் என்னை மன்னித்து விடுங்கள் – பிரபல நடிகர் பேச்சு

nasar kameela
பிரபல குணச்சித்திர நடிகர்  நாசர்,. ஆண்கள் யாவரும் என்னை மன்னியுங்கள் எனப் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் நாசர் இவர், சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:  எனக்கும் லயோலா கல்லூரிக்கும் ஆழமான தொடர்புள்ளது.எல்லோரும் பள்ளி படிப்பு முடித்த பின் லயோலா கல்லூரியில் சேர ஆசைப்படுவர். அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.  அதனால் நான் லயோலாவில் சேரமுடியவில்லை.  இன்று தமிழகத்தில் எல்லா பகுதியிலும் விஸ்காம் படிப்புள்ளாது. இப்படிப்பு லயோலாவில் தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.  நடிகர் சங்க பொழுக்குழு இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது.

சினிமா துறைக்கு வருபவர்களை  நான் வரவேற்கிறேன்.   என் அலுவலகத்தை என் மனைவி பார்க்கிறார். அவர் சைக்காலஜி முடித்தவர்.  ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். ஒரு பொறுப்பைக் கொடுத்தால் ஆணை விட பெண் மிகச்சிறப்பாக அதை செய்துமுடிப்பார். இதை நான் பார்த்திருக்கிறேன்.  எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் நடிகர் ஜீவாவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.