திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (15:11 IST)

ஆவின் வாகனத்தில் பால் பாக்கெட் திருட்டு! – திடீர் சோதனை செய்த அமைச்சர்!

கொரட்டூரில் ஆவின் பால் வண்டியை அமைச்சர் வழிமறித்து சோதனையிட்டபோது அதில் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு பல மாவட்டங்களில் இருந்தும் பால் கொண்டு வரப்பட்டு பதப்படுத்தி பாக்கெட் செய்யப்பட்டு சென்னையின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அவ்வாறு பாலை ஏற்றி சென்ற வேனை நேற்று நள்ளிரவு பால்வளத்துறை அமைச்சர் நாசர் சோதனையிட்டார். அதில் ரூ.2,484 மதிப்புள்ள 107 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவின் பண்ணைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.