திங்கள், 28 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (09:07 IST)

சிம்பு & அஷ்வத் மாரிமுத்து இணையும் படத்தின் கதாநாயகி இவர்தானா?

சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இந்நிலையில் இப்போது சிம்பு திடீரென்று இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இவர், ஏற்கனவே ஏஜிஎஸ் தயாரித்த கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.