திங்கள், 21 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (07:29 IST)

தன்னுடைய அடுத்த படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்த சிம்பு… ரசிகர்கள் குஷி!

சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இன்னும் சிம்பு 48 படம் தொடங்கவில்லை. இதற்கிடையில் அவர் வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதில் டைனோசர்ஸ் பட இயக்குனர் எம் ஆர் மாதவன், 2018 பட இயக்குனர் ஜுட் ஆண்டனி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் பற்றி சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தம்+மன்மதன்+வல்லவன்+விண்ணைத் தாண்டி வருவாயா” in Gen Z = என்னுடைய அடுத்த படம்” எனக் கூறியுள்ளார்.