திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (18:15 IST)

பிரபாஸுக்கு வில்லியாக நடிக்கும் மந்த்ரா பேடி

பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு’ படத்தில், வில்லி கேரக்டரில் நடிக்கிறார் மந்த்ரா பேடி.
 
 
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு’ படத்துக்கு இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்க, நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.
 
இவர்கள் மட்டுமல்லாது, இன்னும் 5 பாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜங்கி பாண்டே, ஜாக்கி ஷெராஃப்,  மகேஷ் மஞ்ரேகர், மந்த்ரா பேடி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளனர். இதில், பிரபாஸுக்கு வில்லியாக நடிக்கிறார் மந்த்ரா பேடி.