ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (11:32 IST)

பெரிய ஹீரோக்களின் அழைப்பை ஏற்க மறுத்த மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனர்… அடுத்த பட அப்டேட்!

கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படத்தின் கதைக்களம், மற்றும் நண்பர்களுக்கிடையிலான பிணைப்பு இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நான்காவது வாரத்தில் கூட இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் அடுத்து நடிக்க தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது தனக்கு எதாவது கதை இருக்கிறதா என சிதம்பரம் கேட்டுள்ளார்.  ஆனால் சிதம்பரம் அடுத்து புதுமுகங்களை வைத்துதான் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அந்த படத்துக்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.