”வெண்மைக்கு காலமும் இல்லை… காரணமும் தேவையில்லை…” ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லை. இப்போது மாளவிகா மோகனன் பிரபல ராப் இசைக்கலைஞரான பாட்ஷாவோடு இணைந்து ‘TAUBA’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இது மாளவிகா நடிக்கும் முதல் இசை ஆல்பம் ஆகும். அடுத்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோஷியல் மீடியா மூலமாக தொடர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையணிந்து எடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.