வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 16 மார்ச் 2018 (16:38 IST)

‘மாரி 2’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

‘மாரி 2’ படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாலாஜி மோகன்.
 


தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிவரும் படம் ‘மாரி 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், இதுவரை 40 சதவீதம் முடிந்திருக்கிறதாம். இன்று முதல் எந்த ஷூட்டிங்கும் நடைபெறாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருப்பதால், ஸ்டிரைக் முடிந்தபிறகு மீதமுள்ள காட்சிகளை எடுக்க இருக்கின்றனர். இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் படம் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார் பாலாஜி மோகன்.