திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (12:01 IST)

பரத நாட்டியத்தை அடுத்து பாட்டு பாடிய ஐஸ்வர்யா தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், ஏற்கனவே மனைவி, அம்மா, இயக்குனர், என குடும்பம், தொழில் என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று ஐநா சபையில் அவரது பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசுகளில் ஒருவரான பவதாரிணி இசையில் ஐஸ்வர்யா தனுஷ், பெண்களின் பெருமையை கூறும் வகையிலான ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது பாடலுக்கு என்ன வகையான விமர்சனம் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்