செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (21:21 IST)

ரோலெக்ஸ் கதாப்பாத்திரம் சிலிர்க்கவைத்தது: பிரபல நடிகை

ரோலெக்ஸ் கதாப்பாத்திரம் சிலிர்க்கவைத்தது: பிரபல நடிகை
ரோலக்ஸ் கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போது சிலிர்க்க வைத்தது என பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து இருப்பார். இந்த கேரக்டர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த கேரக்டர் குறித்து தெரிவித்துள்ளார். 
 
உங்களுக்கான உலகை உருவாக்கியதற்காக நன்றி லோகேஷ் கனகராஜ் என்றும் உலக அளவிலான அனுபவத்தைக் கொடுத்த உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பின்னணி இசை தெறிக்க வைக்கிறது என்றும் பகத் பாசில், விஜய் சேதுபதி அதிர வைக்கும் நடிப்பு என்று தெரிவித்த கீர்த்தி சுரேஷ் ரோலெக்ஸ் கதாபாத்திரம் சிலிர்க்க வைத்தது என்று தெரிவித்துள்ளார்