ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (20:21 IST)

'லியோ' பட தயாரிப்பு நிறுவனம் மன்சூர் அலிகானுக்கு கண்டனம்

Mansoor Ali khan
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் . இந்த நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரித்த படம் லியோ. இப்படத்தில் நடிகர், விஜய், திரிஷா,  மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில்  நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், லியோ பட தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுயோ நிறுவனம் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில், 'மன்சூர் அலிகான் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது பேச்சு சமத்துவம், மரியாதை ஆகியவற்றிக்கு எதிராக உள்ளது.  அவரின் மரியாதை குறைவாக பேச்சை நாங்கள் கண்டிப்பதாக' தெரிவித்துள்ளது.

நடிகை திரிஷா புகார் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில்  அவர் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் அறிறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.