செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:45 IST)

எதற்கு சினிமா மேடைகளிலும், பேட்டிகளிலும், படங்களிலும்..உத்தமன் வேடம்? -புளூ சட்டை மாறன்

நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், தெலுங்கு பவர் ஸ்டார் சிரஞ்சீவி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழ் நடிகர்கள் இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை என புளூ சட்டைமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் தவறாக  பேசியதற்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்.

தமிழ் நடிகர்கள்.. தீபாவளி கொழுக்கட்டையை வாயில் இருந்து இன்னும் எடுக்கவில்லை.

படங்களில் மட்டும் பெண்களை காப்பாற்றும் அட்டைகத்திகள் இவர்கள். கேட்டால் நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து விட்டது என சாக்கு சொல்வார்கள்.

நீங்கள் தனியே கண்டனம் தெரிவித்தால் என்னவாகி விடும்?

உங்களுடன் நடித்த கதாநாயகிக்கே குரல்தர வக்கற்ற உங்களுக்கு எதற்கு அரசியல் ஆசை?

எதற்கு சினிமா மேடைகளிலும், பேட்டிகளிலும், படங்களிலும்..உத்தமன் வேடம்? ‘என்று தெரிவித்துள்ளார்.