திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 4 மே 2023 (09:00 IST)

லியோ படத்தோடு மோதுகிறதா சூரியின் விடுதலை?

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. விரைவில் ஷூட்டிங் முடிந்து அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸ் ஆன சூரியின் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது விடுதலை 2 ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் விஜய்யின் லியோ படத்தோடு மோதும் முடிவை விடுதலை 2 படக்குழு எடுத்துள்ளதாக தெரிகிறது.