ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 3 மே 2023 (19:57 IST)

மனோ பாலாவின் உடலை பார்த்து கண்கலங்கிய விஜய் - வைரல் வீடியோ!

திறமையான நடிகர் மற்றும் இயக்குநர் மனோ பாலா இயக்குநராகத் தொடங்கிய அவரின் பயணம், இன்று YouTube Channel நிறுவி திறன்பட நடத்தி இன்றைய தலைமுறைக்குச் சவால் விடும்படி அவ்வளவு ஆக்ட்டீவாக ஆக இயங்கி வந்தார். மனோபாலாவை நமக்கு காமெடி நடிகராக மட்டுமே தான் பெரும் பாலும் தெரிந்திருக்கும். 
 
நடிகர் கம்ல்ஹாசனின் பரிந்துரையால் 1979ஆம் ஆண்டு ’புதியவார்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவின் உதவியாளராக தனது திரை வாழ்கையை தொடங்கினார். தொடர்ந்து ஆகாய கங்கை, ரஜினியின் ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மல்லுவேட்டி மைனர், வெற்றி படிகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 
 
அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடிக்க தொடங்கி தொடர்ந்து பல்வேறு  திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவரது தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்கவேட்டை படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை தயாரித்துள்ளார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்து வந்தார்.  இந்நிலையில் இன்று காலமான நிலையில் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சற்றுமுன் நடிகர் விஜய் மறைந்த மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து சென்றுள்ளார். இந்த  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.