1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (19:24 IST)

அரசியலுக்கு இடைவெளி விட்டு... சினிமாவில் நடிக்கும் பிரபல ஹீரோ !

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டாரின் சகோதரரும், அரசியல்வாதியுமான நடிகர் பவன் கல்யாண், அரசியலுக்கு இடைவெளி விட்டு  இனி சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள்  வெளியாகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கிய பவன் கல்யாண் இனிதான் முழு நேர அரசியல்வாதியாக இருக்கப்போவதாக அறிவித்தார்.
 
அதனால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவர் அவரது கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அரசியலில் இது அவருக்கு போதாத காலம் என்பதால், மீண்டும் தன் கவனத்தை சினிமா பக்கம் திருப்பியுள்ளார். அடுத்து தன்னை வைத்து வெற்றிப் படங்கள் கொடுத்த அதே இயக்குநர்களான  கிரிஷ், ஹரிஷ் ஷங்கர் போன்றோருடன் இணைந்து   அவர் நான்கு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.