திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 ஜனவரி 2021 (23:41 IST)

விஜய் படத் தயாரிப்பாளரை சந்தித்த முன்னணி இயக்குநர் !

சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் மாஸ்டர்.

இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.

இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களுன் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்லது.

இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி மாஸ்டர் பட தயாரிப்பாளாரைச் சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், இளைய தளபதி திரு,விஜய் மக்கள் செல்வன் திரு,விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் வெற்றித் தயாரிப்பாளர் நம்பிக்கை ஒளிரும் முன்னோடி சாதனையாளர்,என் மீதும் என் படைப்புகள் மீதும் அன்பு கொண்ட இனியவர் திரு,சேவியர் பிரிட்டோ அவர்களுடன் இனிய சந்திப்பு.
@xavierbrittoPF
@VijaySethuOffl




எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.