வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (10:48 IST)

அதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன்? – நடிகர் விஜய் விளக்கம்!

நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாக உள்ளது குறித்து நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மாஸ்டர். பொங்கலையொட்டி ஜனவரி 13 வெளியான இந்த படம் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மக்களை மீண்டும் குவித்த நிலையில், வசூலையும் வாரி குவித்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் 29ம் தேதி ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் ‘மாஸ்டர் படம் கொரோனா காரணமாக மற்ற நாடுகளில் வெளியாகவில்லை. அங்குள்ள ரசிகர்களும் பார்ப்பதற்கு வசதியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களும் மாஸ்டரை கண்டுகளிக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.