வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (09:15 IST)

தயாரிப்பாளர் லலித் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் இணையும் பிரபல நடிகர்?

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித். அவர் தன்னுடைய நிறுவனம் சார்பில், அசுரவதம், குரு, சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல் ரெண்டு காதல், மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட பல்வேறு  படங்களை தயாரித்துள்ளார்.

விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் லலித், அடுத்து தன்னுடைய மகன் அக்‌ஷய் குமாரைக் கதாநாயகனாக ஆக்கவுள்ளார். இந்த படத்துக்கான கதையை   ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் எழுத வெற்றிமாறனின் இணை இயக்குனராக சுரேஷ் என்பவர் இயக்கவுள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் சசிகுமார் அல்லது விக்ரம் பிரபு ஆகியோரில் ஒருவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒரு போலீஸ் அதிகாரிக்கும் விசாரணைக் கைதிக்கும் இடையிலான ஒருநாள் பயணமே இந்தக் கதை என்று சொல்லப்படுகிறது. மைனா பாணியில் மிகவும் எமோஷனலானக் கதையாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.