"3 வாரமா சப்போர்ட் பண்ணியிருக்கீங்க..": 'ரிச்சி' பட விழாவில் குறும்பட லட்சுமி

sivalingam| Last Modified வியாழன், 23 நவம்பர் 2017 (23:48 IST)
'லட்சுமி' என்ற குறும்படம் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது என்பது அனைவரும் தெரிந்ததே. குறிப்பாக லட்சுமி கேரக்டரில் நடித்த லட்சுமிப்ரியா சந்திரமெளலிக்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்து கிடைத்தன.

இந்த நிலையில் தற்போது லட்சுமிப்ரியா சந்திரமெளலி 'ரிச்சி' என்ற படத்தில் நடித்துள்ளார். நிவின்பாலி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஷராதா ஸ்ரீநாத் நாயகி என்றாலும் லட்சுமிக்கும் முக்கியமான கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ரிச்சி ஆடியோ விழாவில் பேசிய லட்சுமி, 'கடந்த மூன்று வாரங்களாக மீடியா எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கீங்க, அதேபோல் இந்த படத்திற்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்


 


இதில் மேலும் படிக்கவும் :