1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 ஆகஸ்ட் 2018 (13:00 IST)

லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா . இப்பாத்திரம்  தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர்  எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ். எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர் .


படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும் போது ,

இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும்.
படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. தலைப்பு பிடித்து தான் தயாரிப்பாளர் கதை கேட்டார். நடிகை லட்சுமிராய்க்கு  படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான்  போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார்.கதையைக் கேட்டு விட்டு  சம்மதம் கூறினார் என்று கூறினார்.