வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 மே 2021 (11:27 IST)

ஆதிபுருஷ் படத்தில் இணைந்த ராஜமௌலியின் மற்றொரு ஹீரோ!

பிரபாஸ் மற்றும் சாயிப் அலிகான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் கிச்சா சுதீப்பும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷர்மா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அந்த படத்தின் மீதான கவனம் அதிகமாகியுள்ளது.