செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (09:40 IST)

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படப்பிடிப்பில் தீவிபத்து - பதற்றத்தில் படக்குழு!

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. 
 
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென தீ விபத்து ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து பெரும் பதற்றத்துடன் அந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உயிர் சேதம் ஏதேனும் ஏற்பட்டதாக என சோதித்து பார்க்கையில் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதனால் ஒட்டு மொத்த படகுழும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.