விஷாலுக்கு கல்யாணம்: வெளியானது மணப்பெண் புகைப்படம்!

Last Updated: வியாழன், 10 ஜனவரி 2019 (19:45 IST)
2004 ஆம் ஆண்டு செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் பிரபல திரைப்பட தயாரிபபாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால். 
 
இதைத்தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிலப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை,  தீராத விளையாட்டு பிள்ளை, சமர், அவன்  இவன், இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார். 
 
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
 
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியிருந்தார். ஆனால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது. 
இந்த செய்தியை தற்போது உறுதி செய்துள்ளார் விஷால். அதோடு, விஷால் மணமுடிக்கவுள்ள பெண்ணின் புகைப்படமும் வெலியாகியுள்ளது. திருமணம் குறித்து விஷால் கூறியது பின்வருமாறு, 
 
அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள். மேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :