திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (22:53 IST)

'கோலமாவு கோகிலா' ரிலீஸ் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு திடீர் மாற்றம்

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும், இந்த படம் இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் மட்டுமின்றி அவர்களுக்கு நெருக்கமான படம் பார்த்தவர்களும் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே கேரளாவில் மட்டும் இந்த படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.