சிவகார்த்திகேயனுகாக நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய அனிருத்

Last Modified ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (19:04 IST)
சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' படத்தின் பாடல்கள் நேற்று முன் தினம் மதுரையில் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே. மேலும் அன்றிரவே இந்த படத்தின் டீசரும் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அதே நாள் இரவில் 'கோலமாவு கோகிலா' படத்தின் 'திட்டம் போட தெரியலை' என்ற பாடலும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், 'இன்று சிவகார்த்திகேயன் நாள்' என்பதால் திட்டம் போட தெரியலை' பாடல் நாளை வெளியாகும் என்று அறிவித்தார். இதனையடுத்து நேற்று இரவு இந்த பாடல் வெளியானது.

தனது நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனுக்காக அனிருத், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' பாடலை ஒருநாள் கழித்து வெளியிட்டு நட்பின் புனிதத்தை காட்டியுள்ளதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், '“உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று கூறினார்இதில் மேலும் படிக்கவும் :