மிஸ் இந்தியா படத்துக்கு வித்தியாசமாக ப்ரோமோஷன் செய்யும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிஸ் இந்தியா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது மிஸ் இந்தியா திரைப்படம். பாரம்பரியமான டீ விற்பனையை உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற்ற முயலும் எம்பிஏ படித்த சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. நடிகையர் திலகத்தின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்ணியமைய திரைப்படம் இது.
இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கும் கீர்த்தி சுரேஷ் அதற்காக சமூகவலைதளங்களிலேயே ப்ரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனது டிஷர்ட்களில் டீயை அதிகம் விரும்பும் பெண் போல புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.