’’கமல்ஹாசன் இன்னும் வளரவில்லை….அவர் அப்பு கமலாகவே உள்ளார்’’- வைகைச் செல்வன்
நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் திமுக, அதிமுக உள்பட எந்த எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், கழங்கங்களோடு கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். கூட்டணி வைக்கிற அளவுக்கு கமல் இன்னும் வளரவில்லை; அகமல் இன்னும் அப்பு கமலாகவே இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.