செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (15:51 IST)

"கமலுக்கு மரியாதை கொடுக்காத கவின்" - லொஸ்லியா செய்த வேலையை பாருங்க!

கமல் ஹாசன் பங்கேற்ற நேற்றைய நிகழ்ச்சியில் கவின்,லொஸ்லியா இருவருக்கும் அட்வைஸ் கொடுத்தார். உங்களது அடையாளம் என்ன என்று கமல் கேட்ட கேள்வியில் கவின் பதில் சொல்ல முடியாமல் முழித்தார். லொஸ்லியாவிடம்,  கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதே காதல் வாழ்க்கைக்கு அவசியம் தான் ஆனால், இதில் நீங்கள் வெற்றி பெற்று உன் ஊராருக்கு பெருமை சேர்க்கவேண்டும் என புத்திமதி கூறினார்.    


 
இப்படி இருவருக்கும் அறிவுரை கூறி ஒரு நாள் கூட ஆகாத பட்சத்தில் தற்போது மீண்டும் அவரவர் வேலையை துவங்கிவிட்டனர், ஆம் இன்றைய ப்ரோமோவில், உன்னை காப்பாற்ற வேண்டும் என்றால் என்னை உன்னிடம் இருந்து பிரிக்கத்தான் பார்ப்பார்கள் என டயலாக் விடுகிறார் கவின். அதற்கு லொஸ்லியா கவினின் வெற்றிக்கு  ஒரு சில விஷயம் சாதகமாக பேசியிருந்தாலும் அவரது மனதில்  கவின் தனக்காக இருக்கவேண்டும் என்று தான் நினைக்கிறார். 
 
இதை கண்ட ரசிகர்கள் பலரும், இவர்கள் இருவருக்கும் எவ்வளவு சொன்னாலும் புரியாது. சொன்னதையே திரும்ப திரும்ப செய்து மக்களை வெறுப்பேற்றி கமலின் மரியாதையும் கெடுத்து விடுவார்கள் என கூறி புலம்பி தள்ளியுள்ளனர்.