புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (18:55 IST)

"பயமா இருக்கு சார்" பயமா..? உனக்கா..? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் கஸ்தூரி - வனிதாவின்  வாத்து சண்டை பஞ்சாயத்தை கமல் முன் வைக்க,  அதற்கு  கமல் என்ன தீர்ப்பு கொடுத்தார் என்பதை இங்கே காணலாம். 


 
இந்த ப்ரோமோ கொஞ்சம் ஃபன் கலந்து வெளியிட்டுள்ளனர். அதாவது வனிதாவை அவங்க வாத்துன்னு சொன்னது என் கோபமே கிடையாது என வனிதா ஆரம்பிக்க உடனே கஸ்தூரி , நான் அப்படி சொல்லவேயில்லை சார் என்று கூறுகிறார். பின்ன யாரை வாத்துன்னு சொன்னீங்க..?  என்று கஸ்தூரியிடம் கமல் காட்டமான முகத்துடன் கேள்வி கேட்கிறார் . அதற்கு கஸ்தூரி " அது வாத்து பாடல் சார்,  வாத்தை தான் வாத்துன்னு சொன்னேன்" என்று கூறி மழுப்புகிறார். 
 
அதற்கு வனிதா திரைக்கதைக்கு நல்ல மசாலா போட்டேன் சார் என்று.. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்துச்செல்வதற்காக தான் அப்படி செய்தேன் என்பதை சூசகமாக சொல்கிறார்.  உடனே கமல் வனிதா எதையோ சொல்ல முயற்சிக்கிறார் என்று கூறி குறுக்கிட்டு கேட்கிறார். 
 
அதற்கு வனிதா " பயமா இருக்கு சார்.... என்று கூற உடனே கமல் பயப்படாதீங்க , அப்படியெல்லாம் பயப்படவே கூடாது என்று நக்கலாக கூறுகிறார். உடனே ஆடியன்ஸின் கைதட்டலால் அந்த அரங்கமே அதிர்கிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் பலரும்  பயமா..? உனக்கா..? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு! என்று கூறி கலாய்த்து வருகின்றனர்.