22 வயதில் இயக்குனர், 24 வயதில் தயாரிப்பாளர்: அசத்தும் கார்த்திக் நரேன்

Last Modified புதன், 10 ஜனவரி 2018 (23:55 IST)
கடந்த ஆண்டு வெளியான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமான 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன், முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகை தனது பக்கம் திருப்பிய பெருமைக்குரியவர்.

இவர் தற்போது அரவிந்தசாமி, ஸ்ரேயா சரண் நடித்த 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்த இயக்குனர் கவுதம் மேனன், 'சொன்ன நேரத்தில் மிகச்சரியாக திட்டமிட்டு படத்தை இயக்கி முடித்த கார்த்திக் நரேனுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கார்த்திக் நரேன் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். நைட் நாஸ்டால்ஜியா ஃபிலிமோடெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள கார்த்திக் இந்த நிறுவனத்தின் மூலம் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் வெகுவிரைவில் வெளியாகும் என்று கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :