1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:33 IST)

அமலா படத்திற்காக நடிகர் கார்த்தி பாடிய பாடல்: வீடியோ

karthi
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மனைவியும் நடிகையுமான அமலா நடிக்கும் படத்திற்காக நடிகர் கார்த்தி ஒரு பாடலை பாடியுள்ளார். 
 
ட்ரீம் வாரியர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘கணம்’ என்ற படம் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
 
இந்தநிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
தமிழ் திரை உலகில் பல நடிகர்கள் பாடல்கள் பாடி உள்ள நிலையில் தற்போது கார்த்தியும் பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது