விஜயகாந்தை பார்த்து நேரில் வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அதேபோல் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்துக்கு பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக நடிகர் கார்த்திக் செய்துள்ளார்
என்னை பார்த்தவுடன் எனது கையை பற்றிக் கொண்டார் என்றும் எளிதில் அடையாளம் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நடிகர் சங்கம் அவருக்கு கடமைப் பட்டுள்ளது என்றும் அதனால்தான் அவரை சந்திக்க வந்துள்ளேன் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்
நடிகர் கார்த்தி மட்டுமின்றி மேலும் சில நடிகர்களும் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது