தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள நடிகர்கள்

adil ibrahim
cauveri manickam| Last Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:43 IST)
தமிழ்ப் படங்களில் நடிக்க ஏராளமான மலையாள நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளா என்றாலே முன்பெல்லாம் அங்கிருந்து ஹீரோயின்கள் தான் தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி ஆவார்கள். ஆனால், தற்போது ஏகப்பட்ட மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபஹத் ஃபாசில் என முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது, டொவினோ தாமஸ், மக்பூல் சல்மான், அப்பாணி சரத்குமார் என சின்ன நடிகர்கள் கூட தமிழில் நடிக்கின்றனர். ஹீரோவாக என்றில்லை, வில்லன், குணசித்ரம் என எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்க ஒப்புக் கொள்கின்றனர்.

அந்த வரிசையில், அடில் இப்ராஹிம் என்ற நடிகர் இணைந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் உதவியாளர் விஜயராஜ் இயக்கும் ‘முன் அறிவாளன்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் அடில். ஜெயராம், பிரகாஷ் ராஜ் நடித்த ‘அச்சாயன்ஸ்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் இவர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :