1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (17:56 IST)

ஓடிடி ப்ளாட்பார்மில் கால் பதிக்கும் உலகநாயகன் - கமலின் அடுத்த அவதாரம்

கமல்

கமல் விரைவில் நடிப்புக்கு முழுக்குப் போடவுள்ள நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறார்.

கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறனால் கோலோச்சி வருபவர் கமல். அரசியல் கட்சித் தலைவராக அவர் மாறியதில் இருந்து சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார். இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கிறான் ஆகிய இரு படங்கள்தான் அவரது கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கமல் நடிப்பை விட்டு விலகினாலும் தயாரிப்புப் பணிகள் மூலம் தன்னுடைய சினிமா உறவை கைவிடாமல் இருக்கப் போகிறார்.

அவரது ராஜ்கமல் நிறுவனமும் பனிஜாய் ஏஷியா என்ற நிறுவனமும் இணைந்து புதிதாக ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க உள்ளனர். இதுகுறித்து கமல் டிவிட்டர் பக்கத்தில் ‘முதல் முயற்சிகளில் ஒன்றாக, பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து, நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான தளத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடையவன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த கட்டம்’ எனத் தெரிவித்துள்ளார்.